Sunday, June 7, 2020

அலகு:2 சுந்தரர் ஏழாம் திருமுறை (Sundarar) 61 ஆம் பதிகம் ( 11 பாடல்கள் )

7.61 திருக்கச்சி ஏகம்பம்
தக்கேசி

Sundarar (சுந்தரர்) – Meandering Duo

பதிக வரலாறு:

சுவாமிகள், திருவொற்றியூரில் சங்கிலியார் பொருட்டுச் செய்த சூளுறவைப் பிழைத்துத் திருவாரூருக்குச் செல்லப் புறப்பட்டு்த் திருவொற்றியூர் எல்லையைக் கடந்தபொழுது மறைந்த கண்களைத் தரவேண்டிப் பல தலங்களிலும் வணங்கிப் பாடி, திருவெண்பாக்கத்தில் ஊன்றுகோலைப் பெற்றுத் திருவாலங்காடு திருவூறல்களைத் தொழுது காஞ்சிபுரத்தை அடைந்து, காமக்கோட்டத்தில் அறம்புரக்கும் அம்மையை வணங்கித் திருவேகம்பத்தை அடைந்து, "கச்சி ஏகம்பனே, கடையானேன் பிழை பொறுத்துக் கண்ணளித் தருளாய்' என்று வேண்டிப் பெருமான், இடக்கண் கொடுக்கப்பெற்று மகிழ்ந்து பாடியருளியது இத் திருப்பதிகம். (தி. 12 பெரிய. புரா. ஏயர்கோன். 288)

குறிப்பு: இத்திருப்பதிகம், தமக்குக் கண் அளித்த இறைவரது திருவருளை வியந்து அருளிச்செய்தது.

பண்: தக்கேசி

பதிக எண்: 61

திருச்சிற்றம்பலம்.

1ஆலம் தான் உகந்து அமுது செய்தானை, ஆதியை, அமரர் தொழுது ஏத்தும்
சீலம் தான் பெரிதும்(ம்) உடையானை, சிந்திப்பார் அவர் சிந்தை உளானை,
ஏல வார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனை, கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .

1

1. பொ-ரை: நஞ்சினைத் தான் விரும்பி உண்டு, அமுதத்தைத் தேவர்களுக்கு உரியதாக்கியவனும், யாவர்க்கும், முதல்வனும், தேவர்கள் வணங்கித் துதிக்கின்ற பெருமையை மிக உடையவனும், தன்னை நினைப்பவரது நினைவில் விளங்குபவனும், மயிர்ச்சாந்து அணிந்த நீண்ட கூந்தலையுடையவளாகிய, 'உமை' என்னும் நங்கை,

2உற்றவர்க்கு உதவும் பெருமானை, ஊர்வது ஒன்று உடையான், உம்பர் கோனை,
பற்றினார்க்கு என்றும் பற்றவன் தன்னை, பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானை,
அற்றம் இல் புகழாள் உமை நங்கை ஆதரித்து வழிபடப் பெற்ற
கற்றை வார் சடைக் கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .

தான் எந்நாளும் துதித்து வழிபடுதலைப் பெற்றமைக்கு முதல்வனும், காலகாலனும் ஆகிய, திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு!

கு-ரை: 'வியப்பு' என்பது சொல்லெச்சம், இவ்விடத்து, சேக்கிழார், "விண்ணாள்வார் அமுதுண்ண மிக்கபெருவிடம் உண்ட - கண்ணாளா" (தி. 12 ஏயர்கோன். புரா. 286) என்று அருளுதலின், "ஆலந் தான் உகந்து அமுதுசெய்தானை" என்றதற்கு இதுவே, பொருளாதல் அறிக. 'சீலம்' என்பது, குணம் என்னும் பொருட்டாய், பெருமையைக் குறித்தது. திருவேகம்பத்தில் உள்ள உமையம்மைக்கு, 'ஏவலார் குழலி' எனப் பெயர் வழங்குதல் இங்கு நினைக்கத் தக்கது. 'என்றும் வழிபட' என இயையும்; இனி வரும் திருப்பாடல்களிலும் அவ்வாறு இயைவனவற்றை அறிந்துகொள்க. கச்சி ஏகம்பம், உமையம்மை இறைவனை என்றும் வழிபடும் தலமாய் இருத்தலை, திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணத்துட் காண்க. "வழிபடப் பெற்ற" என்றது. "எடுத்த பொற் பாதமுங் காணப் பெற்றால்" (தி. 4 ப 81. பா 4) என்றதுபோல நின்றது. 'வழிபடப்பெற்ற காலகாலன்' என்றதனை, 'அந்தணர் ஆக்கொண்ட அரசன்' என்பதுபோலக் கொள்க.

2. பொ-ரை: தன்னைப் புகலிடமாக அடைந்தவர்க்கு நலம் செய்கின்ற பெருமானும், ஊர்தி எருதாகிய ஒன்றை உடையவனும், தேவர்கட்குத் தலைவனும், தன்னை விடாது பற்றினவர்க்கு, பெரிய பற்றுக்கோடாய் நிற்பவனும், தன்னை நினைப்பவரது மனத்தில் பரவி நின்று, அதனைத் தன் இடமாகக் கொண்டவனும் ஆகிய, அழிவில்லாத புகழையுடையவளாகிய, 'உமை' என்னும் நங்கை விரும்பி வழிபடப் பெற்ற, கற்றையான நீண்ட சடையையுடைய, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு.

3திரியும் முப்புரம் தீப்பிழம்பு ஆகச் செங்கண் மால் விடைமேல்-திகழ்வானை,
கரியின் ஈர் உரி போர்த்து உகந்தானை, காமனைக் கனலா விழித்தானை,
வரி கொள் வெள்வளையாள் உமை நங்கை மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
பெரிய கம்பனை, எங்கள் பிரானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
  
கு-ரை: "ஒன்று" என்றது தொகைக் குறிப்பு. "பற்றவன்" என்றதில் அகரம், ஒட்டுச் சொல்லாய ஒரு மொழியிடை வந்த சாரியை. 'பரவிக்கொண்டானை' என்பதும் பாடம்.

3. பொ-ரை: வானத்தில் திரிகின்ற முப்புரங்கள் தீப்பிழம்பாய் எரிந்தொழியுமாறு செய்து, அக்காலை, சிவந்த கண்களையுடைய திருமாலாகிய விடையின்மேல் விளங்கியவனும், யானையின் உரித்த தோலை விரும்பிப் போர்த்தவனும், மன்மதனைத் தீயாய் எரியும்படி நெற்றிக்கண்ணைத் திறந்தவனும், வரிகளைக் கொண்ட வெள்ளிய வளைகளை அணிந்தவளாகிய, 'உமை' என்னும் நங்கை அணுகி நின்று, துதித்து வழிபடப் பெற்ற பெரியோனும் ஆகிய, திருவேகம்பத்தில் உள்ள பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு.

கு-ரை: திரிபுரம் எரித்த ஞான்று சிவபிரானைத் திருமால் இடபமாய்ச் சுமந்தமையை,

"தடமதில்க ளவைமூன்றுந் தழலெரித்த அந்நாளில்
இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ"

என்ற திருவாசகத்தால் உணர்க. (தி. 8 திருச்சாழல்-15.)

4. பொ-ரை: குண்டலம் விளங்குகின்ற காதினையுடையவனும்,

4குண்டலம் திகழ் காது உடையானை, கூற்று உதைத்த கொடுந்தொழிலானை,
வண்டு அலம்பும் மலர்க் கொன்றையினானை, வாள் அரா மதி சேர் சடையானை,
கெண்டை அம் தடங்கண் உமை நங்கை கெழுமி ஏத்தி வழிபடப் பெற்ற
கண்டம் நஞ்சு உடைக் கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
  கு-ரை: "ஒன்று" என்றது தொகைக் குறிப்பு. "பற்றவன்" என்றதில் அகரம், ஒட்டுச் சொல்லாய ஒரு மொழியிடை வந்த சாரியை. 'பரவிக்கொண்டானை' என்பதும் பாடம்.

3. பொ-ரை: வானத்தில் திரிகின்ற முப்புரங்கள் தீப்பிழம்பாய் எரிந்தொழியுமாறு செய்து, அக்காலை, சிவந்த கண்களையுடைய திருமாலாகிய விடையின்மேல் விளங்கியவனும், யானையின் உரித்த தோலை விரும்பிப் போர்த்தவனும், மன்மதனைத் தீயாய் எரியும்படி நெற்றிக்கண்ணைத் திறந்தவனும், வரிகளைக் கொண்ட வெள்ளிய வளைகளை அணிந்தவளாகிய, 'உமை' என்னும் நங்கை அணுகி நின்று, துதித்து வழிபடப் பெற்ற பெரியோனும் ஆகிய, திருவேகம்பத்தில் உள்ள பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு.

கு-ரை: திரிபுரம் எரித்த ஞான்று சிவபிரானைத் திருமால் இடபமாய்ச் சுமந்தமையை,

"தடமதில்க ளவைமூன்றுந் தழலெரித்த அந்நாளில்
இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ"

என்ற திருவாசகத்தால் உணர்க. (தி. 8 திருச்சாழல்-15.)

4. பொ-ரை: குண்டலம் விளங்குகின்ற காதினையுடையவனும்,

5வெல்லும் வெண்மழு ஒன்று உடையானை, வேலை நஞ்சு உண்ட வித்தகன் தன்னை,
அல்லல் தீர்த்து அருள்செய்ய வல்லானை, அருமறை அவை அங்கம் வல்லானை,
எல்லை இல் புகழாள் உமை நங்கை என்று ஏத்தி வழிபடப் பெற்ற
நல்ல கம்பனை, எங்கள் பிரானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
  
கூற்றுவனை உதைத்துக் கொன்ற கொடுமையான தொழிலை உடையவனும், வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மலர் மாலையை அணிந்தவனும், கொலைத் தொழிலையுடைய பாம்பு பிறையைச் சேர்ந்து வாழும் சடையை உடையவனும் ஆகிய, கெண்டைமீன் போலும் பெரிய கண்களையுடைய, 'உமை' என்னும் நங்கை அணுகி நின்று, துதித்து வழிபடப் பெற்ற, கண்டத்தில் நஞ்சினையுடைய, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு.

கு-ரை: "கண்டம்" என்றதில் தொக்கு நின்ற ஏழனுருபு. "உடை" என்ற, ஈறுகெட்ட பெயரெச்சக் குறிப்பைக் கொண்டது.

5. பொ-ரை: யாவரையும் வெல்லும் தன்மையுடைய, வெள்ளிய மழு ஒன்றை உடையவனும், கடலில் தோன்றிய நஞ்சினை உண்ட சதுரப்பாடுடையவனும், அடியார்களுக்குத் துன்பங்களைப் போக்கி அருள்செய்ய வல்லவனும், அரிய வேதங்களையும் அவற்றின் அங்கங்களையும் செய்ய வல்லவனும் ஆகிய, அளவற்ற புகழை யுடையவளாகிய, 'உமை' என்னும் நங்கை, எந்நாளும், துதித்து வழிபடப்பெற்ற, நன்மையையுடைய, திருவேகம்பத்தில் உள்ள எங்கள் பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு!

6திங்கள் தங்கிய சடை உடையானை, தேவதேவனை, செழுங் கடல் வளரும்
சங்க வெண்குழைக் காது உடையானை, சாம வேதம் பெரிது உகப்பானை,
மங்கை நங்கை மலை மகள் கண்டு மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
கங்கையாளனை, கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
  
கு-ரை: வெண்மை, கூர்மையைக் குறிக்கும் குறிப்புமொழி, நன்மையுடைமை பற்றியே, இறைவன், 'சிவன்' எனப்படுதல் அறிந்து கொள்க.

6. பொ-ரை: பிறை தங்கியுள்ள சடையையுடையவனும், தேவர்க்குத் தேவனும், வளவிய கடலில் வளர்கின்ற சங்கினால் இயன்ற, 'வெள்ளிய குழையை யணிந்த காதினையுடையவனும், சாம வேதத்தை மிக விரும்புபவனும் ஆகிய, என்றும் மங்கைப் பருவம் உடைய நங்கையாகிய மலைமகள் தவத்தாற் கண்டு அணுகி, துதித்து வழிபடப்பெற்ற, கங்கையை யணிந்த, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு.

கு-ரை: திருவேகம்பத்தில், இறைவி, இறைவனது இலிங்கத் திருவுருவைத் தவம் செய்து கண்ட வரலாற்றினை, திருக்குறிப்புத் தொண்டர் புராணத்துட்காண்க. இனி, கம்பையாற்றின் மணலால் இறைவி இலிங்கம் அமைத்து வழிபட்டனர் என்றும் புராணம் கூறும். அதன் வழி நின்று, "கண்டு" என்றதற்கு, 'ஆக்கி' என்று உரைப்பினும் ஆம்.

7. பொ-ரை: தேவர்கள் தொழுது துதிக்க இருப்பவனும்,

7விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை, வேதம் தான் விரித்து ஓத வல்லானை,
நண்ணினார்க்கு என்றும் நல்லவன் தன்னை, நாளும் நாம் உகக்கின்ற பிரானை,
எண் இல் தொல் புகழாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணு மூன்று உடைக் கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
  
கு-ரை: வெண்மை, கூர்மையைக் குறிக்கும் குறிப்புமொழி, நன்மையுடைமை பற்றியே, இறைவன், 'சிவன்' எனப்படுதல் அறிந்து கொள்க.

6. பொ-ரை: பிறை தங்கியுள்ள சடையையுடையவனும், தேவர்க்குத் தேவனும், வளவிய கடலில் வளர்கின்ற சங்கினால் இயன்ற, 'வெள்ளிய குழையை யணிந்த காதினையுடையவனும், சாம வேதத்தை மிக விரும்புபவனும் ஆகிய, என்றும் மங்கைப் பருவம் உடைய நங்கையாகிய மலைமகள் தவத்தாற் கண்டு அணுகி, துதித்து வழிபடப்பெற்ற, கங்கையை யணிந்த, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு.

கு-ரை: திருவேகம்பத்தில், இறைவி, இறைவனது இலிங்கத் திருவுருவைத் தவம் செய்து கண்ட வரலாற்றினை, திருக்குறிப்புத் தொண்டர் புராணத்துட்காண்க. இனி, கம்பையாற்றின் மணலால் இறைவி இலிங்கம் அமைத்து வழிபட்டனர் என்றும் புராணம் கூறும். அதன் வழி நின்று, "கண்டு" என்றதற்கு, 'ஆக்கி' என்று உரைப்பினும் ஆம்.

7. பொ-ரை: தேவர்கள் தொழுது துதிக்க இருப்பவனும்,

8சிந்தித்து என்றும் நினைந்து எழுவார்கள் சிந்தையில்-திகழும் சிவன் தன்னை,
பந்தித்த(வ்) வினைப்பற்று அறுப்பானை, பாலொடு ஆன் அஞ்சும் ஆட்டு உகந்தானை,
அந்தம் இல் புகழாள் உமை நங்கை ஆதரித்து வழிபடப் பெற்ற
கந்த வார்சடைக் கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
  
வேதங்களை விரித்துச் செய்ய வல்லவனும், தன்னை அடைந்தவர்கட்கு எந்நாளும் நலத்தையே செய்பவனும், நாள்தோறும் நாம் விரும்புகின்ற தலைவனும் ஆகிய, எண்ணில்லாத பழையவான புகழை யுடையவளாகிய, 'உமை' என்னும் நங்கை, எந்நாளும் துதித்து வழிபடப்பெற்ற, கண்களும் மூன்று உடைய, திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு.

கு-ரை: செய்யும் செயல்கள்தாம் எண்ணில்லாதனவாகலின், அவற்றால் வரும் புகழ்களும் எண்ணிலவாயின.

அவைதாம் அனாதியாக வருதலின் தொல்புகழாயின. "கண்ணும்" என்ற உம்மை சிறப்பு. 'கண்ணு' என உகரச்சாரியையாகக் கண்ணழிப் பினுமாம்.

8. பொ-ரை: நாள்தோறும் தன்னையே சிந்தித்து, துயிலெழுங் காலத்துத் தன்னையே நினைத்து எழுவார்களது உள்ளத்தில் விளங்குகின்ற மங்கலப் பொருளானவனும், உயிர்களைப் பிணித்துள்ள வினைத் தொடக்கை அறுப்பவனும், பால் முதலிய ஆனஞ்சும் ஆடுதலை விரும்பியவனும் ஆகிய, முடிவில்லாத புகழையுடையவளாகிய, 'உமை' என்னும் நங்கை விரும்பி வழிபடப்பெற்ற, கொன்றை முதலிய பூக்களின் மணத்தையுடைய, நீண்ட சடையையுடைய, திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக்காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு!

கு-ரை: சிந்தித்தல், இறைவனது பெருமைகள் பலவற்றை என்க. 'வினை பற்றறுப்பானை' என்பதும் பாடம்.

9வரங்கள் பெற்று உழல் வாள் அரக்கர் தம் வாலிய(ப்) புரம் மூன்று எரித்தானை,
நிரம்பிய தக்கன் தன் பெருவேள்வி நிலந்தரம் செய்த நிட்கண்டனை,
பரந்த தொல் புகழாள் உமை நங்கை பரவி ஏத்தி வழிபடப்பெற்ற
கரங்கள் எட்டு உடைக் கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
  
9. பொ-ரை: தவத்தின் பயனாகிய வரங்களைப் பெற்றமையால், வானத்தில் உலாவும் ஆற்றலைப் பெற்ற கொடிய அசுரர்களது வலிய அரண்கள் மூன்றினை எரித்தவனும், தேவர் எல்லாரும் நிரம்பிய தக்கனது பெருவேள்வியை அழித்த வன்கண்மையுடையவனும் ஆகிய, பரவிய, பழைய புகழையுடையவளாகிய, 'உமை' என்னும் நங்கை முன்னிலையாகவும், படர்க்கையாகவும் துதித்து வழிபடப் பெற்ற, எட்டுக் கைகளையுடைய, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு!

கு-ரை: அசுரர்கள் வரம் பெற்றதனை அவர்களது ஊர்மேல் ஏற்றி அருளினார். "நிரந்தரம்" என்றது, 'மாறாத அழிவு' என்றதாம். "நிர்க்கண்டகம்" மாறாதவன்கண்மை. 'நிர்' என்னும் வடமொழி இடைச்சொல், இன்மையையேயன்றி தேற்றப் பொருளும் தருவதாதல் அறிக.

10. பொ-ரை: தேவர் பெருமானாகிய சிவபெருமானை, அவனது ஒரு கூறாகிய உமாதேவிதானே, தான் வழிபடவேண்டுவது இல்லை

10எள்கல் இன்றி இமையவர் கோனை, ஈசனை, வழிபாடு செய்வாள் போல்
உள்ளத்து உள்கி, உகந்து, உமை நங்கை வழிபடச் சென்று நின்றவா கண்டு,
வெள்ளம் காட்டி வெருட்டிட, அஞ்சி வெருவி ஓடித் தழுவ வெளிப்பட்ட
கள்ளக் கம்பனை, எங்கள் பிரானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
  
9. பொ-ரை: தவத்தின் பயனாகிய வரங்களைப் பெற்றமையால், வானத்தில் உலாவும் ஆற்றலைப் பெற்ற கொடிய அசுரர்களது வலிய அரண்கள் மூன்றினை எரித்தவனும், தேவர் எல்லாரும் நிரம்பிய தக்கனது பெருவேள்வியை அழித்த வன்கண்மையுடையவனும் ஆகிய, பரவிய, பழைய புகழையுடையவளாகிய, 'உமை' என்னும் நங்கை முன்னிலையாகவும், படர்க்கையாகவும் துதித்து வழிபடப் பெற்ற, எட்டுக் கைகளையுடைய, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு!

கு-ரை: அசுரர்கள் வரம் பெற்றதனை அவர்களது ஊர்மேல் ஏற்றி அருளினார். "நிரந்தரம்" என்றது, 'மாறாத அழிவு' என்றதாம். "நிர்க்கண்டகம்" மாறாதவன்கண்மை. 'நிர்' என்னும் வடமொழி இடைச்சொல், இன்மையையேயன்றி தேற்றப் பொருளும் தருவதாதல் அறிக.

10. பொ-ரை: தேவர் பெருமானாகிய சிவபெருமானை, அவனது ஒரு கூறாகிய உமாதேவிதானே, தான் வழிபடவேண்டுவது இல்லை

11பெற்றம் ஏறு உகந்து ஏற வல்லானை, “பெரிய எம்பெருமான்” என்று எப்போதும்
கற்றவர் பரவப்படுவானை, “காணக் கண் அடியேன் பெற்றது” என்று
கொற்றவன், கம்பன், கூத்தன் எம்மானை, குளிர் பொழில்-திரு நாவல் ஆரூரன்
நல்-தமிழ் இவை ஈர்-ஐந்தும் வல்லார், நன்நெறி(ய்) உலகு எய்துவர் தாமே .
  பயனின்மை யறிக. இத் திருப்பதிகத்துள், "நல்ல கம்பன்", "கள்ளக் கம்பன்" என வந்தவையும், அம்மை வழிபட்ட நிலையைக்கருதி அருளினவே யாதலின், அவற்றை உருத்திரர் வழிபட்ட நிலை, திருமால் வழிபட்ட நிலைகளாகக் கூறும் புராண வரலாற்றோடு இயைக்க முயலுதல் பொருந்தாமை யறிக.

11. பொ-ரை: குளிர்ந்த சோலைகளையுடைய திருநாவலூரனாகிய நம்பியாரூரன், ஆனேற்றை விரும்பி ஏற வல்லவனும், மெய்ந்நூல்களைக் கற்றவர்கள், 'இவன் எம் பெரிய பெருமான்' என்று எப்போதும் மறவாது துதிக்கப்படுபவனும், யாவர்க்கும் தலைவனும், கூத்தாடுதலை உடையவனும் ஆகிய, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு அடியேன், கண்பெற்றவாறு வியப்பு என்று சொல்லிப் பாடிய நல்ல தமிழ்ப் பாடலாகிய இவை பத்தினையும் பாட வல்லவர். நன்னெறியாற்பெறும் உலகத்தைத் திண்ணமாக அடைவர்.

கு-ரை: 'பெற்ற' எனக் கெடுதற்பாலதாகிய மகரம், செய்யுளின்பம் நோக்கிக் கெடாதுநின்றதென்க. இனி, 'பெற்றவேறு' என்பதே பாடம் எனினுமாம். இவ்வாறன்றி, 'பெற்றத்தை ஏறுதலை உகந்து ஏற வல்லானை' என்றுரைத்தல் சிறவாமையறிக. "பெரிய பெருமான்" என்றதனை, "பெரிய பெருமானடிகள்" (தி. 7 ப. 53.) என்றது போலக் கொள்க. நன்னெறி, ஞானநெறி; அதனாற் பெறும் உலகம், சிவலோகம்.                                                                                                                                                 திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment

மாணிக்கவாசகர் Thiruvembavai Padalgal 01-20 (திருவெம்பாவை பாடல்கள் 01-20)

திருவெம்பாவை பாடல் 20 போற்றியென் வாழ்முதலாகிய பொருளே புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு ஏற்றி நின் திருமுகத்து எமக்கருள் மலரும் எழில்ந...