Sunday, June 7, 2020

அலகு:2 சுந்தரர் ஏழாம் திருமுறை (Sundarar) 61 ஆம் பதிகம் ( 11 பாடல்கள் )

7.61 திருக்கச்சி ஏகம்பம்
தக்கேசி

Sundarar (சுந்தரர்) – Meandering Duo

பதிக வரலாறு:

சுவாமிகள், திருவொற்றியூரில் சங்கிலியார் பொருட்டுச் செய்த சூளுறவைப் பிழைத்துத் திருவாரூருக்குச் செல்லப் புறப்பட்டு்த் திருவொற்றியூர் எல்லையைக் கடந்தபொழுது மறைந்த கண்களைத் தரவேண்டிப் பல தலங்களிலும் வணங்கிப் பாடி, திருவெண்பாக்கத்தில் ஊன்றுகோலைப் பெற்றுத் திருவாலங்காடு திருவூறல்களைத் தொழுது காஞ்சிபுரத்தை அடைந்து, காமக்கோட்டத்தில் அறம்புரக்கும் அம்மையை வணங்கித் திருவேகம்பத்தை அடைந்து, "கச்சி ஏகம்பனே, கடையானேன் பிழை பொறுத்துக் கண்ணளித் தருளாய்' என்று வேண்டிப் பெருமான், இடக்கண் கொடுக்கப்பெற்று மகிழ்ந்து பாடியருளியது இத் திருப்பதிகம். (தி. 12 பெரிய. புரா. ஏயர்கோன். 288)

குறிப்பு: இத்திருப்பதிகம், தமக்குக் கண் அளித்த இறைவரது திருவருளை வியந்து அருளிச்செய்தது.

பண்: தக்கேசி

பதிக எண்: 61

திருச்சிற்றம்பலம்.

1ஆலம் தான் உகந்து அமுது செய்தானை, ஆதியை, அமரர் தொழுது ஏத்தும்
சீலம் தான் பெரிதும்(ம்) உடையானை, சிந்திப்பார் அவர் சிந்தை உளானை,
ஏல வார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனை, கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .

1


1. பொ-ரை: நஞ்சினைத் தான் விரும்பி உண்டு, அமுதத்தைத் தேவர்களுக்கு உரியதாக்கியவனும், யாவர்க்கும், முதல்வனும், தேவர்கள் வணங்கித் துதிக்கின்ற பெருமையை மிக உடையவனும், தன்னை நினைப்பவரது நினைவில் விளங்குபவனும், மயிர்ச்சாந்து அணிந்த நீண்ட கூந்தலையுடையவளாகிய, 'உமை' என்னும் நங்கை,

2உற்றவர்க்கு உதவும் பெருமானை, ஊர்வது ஒன்று உடையான், உம்பர் கோனை,
பற்றினார்க்கு என்றும் பற்றவன் தன்னை, பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானை,
அற்றம் இல் புகழாள் உமை நங்கை ஆதரித்து வழிபடப் பெற்ற
கற்றை வார் சடைக் கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .

தான் எந்நாளும் துதித்து வழிபடுதலைப் பெற்றமைக்கு முதல்வனும், காலகாலனும் ஆகிய, திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு!

கு-ரை: 'வியப்பு' என்பது சொல்லெச்சம், இவ்விடத்து, சேக்கிழார், "விண்ணாள்வார் அமுதுண்ண மிக்கபெருவிடம் உண்ட - கண்ணாளா" (தி. 12 ஏயர்கோன். புரா. 286) என்று அருளுதலின், "ஆலந் தான் உகந்து அமுதுசெய்தானை" என்றதற்கு இதுவே, பொருளாதல் அறிக. 'சீலம்' என்பது, குணம் என்னும் பொருட்டாய், பெருமையைக் குறித்தது. திருவேகம்பத்தில் உள்ள உமையம்மைக்கு, 'ஏவலார் குழலி' எனப் பெயர் வழங்குதல் இங்கு நினைக்கத் தக்கது. 'என்றும் வழிபட' என இயையும்; இனி வரும் திருப்பாடல்களிலும் அவ்வாறு இயைவனவற்றை அறிந்துகொள்க. கச்சி ஏகம்பம், உமையம்மை இறைவனை என்றும் வழிபடும் தலமாய் இருத்தலை, திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணத்துட் காண்க. "வழிபடப் பெற்ற" என்றது. "எடுத்த பொற் பாதமுங் காணப் பெற்றால்" (தி. 4 ப 81. பா 4) என்றதுபோல நின்றது. 'வழிபடப்பெற்ற காலகாலன்' என்றதனை, 'அந்தணர் ஆக்கொண்ட அரசன்' என்பதுபோலக் கொள்க.

2. பொ-ரை: தன்னைப் புகலிடமாக அடைந்தவர்க்கு நலம் செய்கின்ற பெருமானும், ஊர்தி எருதாகிய ஒன்றை உடையவனும், தேவர்கட்குத் தலைவனும், தன்னை விடாது பற்றினவர்க்கு, பெரிய பற்றுக்கோடாய் நிற்பவனும், தன்னை நினைப்பவரது மனத்தில் பரவி நின்று, அதனைத் தன் இடமாகக் கொண்டவனும் ஆகிய, அழிவில்லாத புகழையுடையவளாகிய, 'உமை' என்னும் நங்கை விரும்பி வழிபடப் பெற்ற, கற்றையான நீண்ட சடையையுடைய, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு.

3திரியும் முப்புரம் தீப்பிழம்பு ஆகச் செங்கண் மால் விடைமேல்-திகழ்வானை,
கரியின் ஈர் உரி போர்த்து உகந்தானை, காமனைக் கனலா விழித்தானை,
வரி கொள் வெள்வளையாள் உமை நங்கை மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
பெரிய கம்பனை, எங்கள் பிரானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
  

கு-ரை: "ஒன்று" என்றது தொகைக் குறிப்பு. "பற்றவன்" என்றதில் அகரம், ஒட்டுச் சொல்லாய ஒரு மொழியிடை வந்த சாரியை. 'பரவிக்கொண்டானை' என்பதும் பாடம்.

3. பொ-ரை: வானத்தில் திரிகின்ற முப்புரங்கள் தீப்பிழம்பாய் எரிந்தொழியுமாறு செய்து, அக்காலை, சிவந்த கண்களையுடைய திருமாலாகிய விடையின்மேல் விளங்கியவனும், யானையின் உரித்த தோலை விரும்பிப் போர்த்தவனும், மன்மதனைத் தீயாய் எரியும்படி நெற்றிக்கண்ணைத் திறந்தவனும், வரிகளைக் கொண்ட வெள்ளிய வளைகளை அணிந்தவளாகிய, 'உமை' என்னும் நங்கை அணுகி நின்று, துதித்து வழிபடப் பெற்ற பெரியோனும் ஆகிய, திருவேகம்பத்தில் உள்ள பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு.

கு-ரை: திரிபுரம் எரித்த ஞான்று சிவபிரானைத் திருமால் இடபமாய்ச் சுமந்தமையை,


"தடமதில்க ளவைமூன்றுந் தழலெரித்த அந்நாளில்
இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ"

என்ற திருவாசகத்தால் உணர்க. (தி. 8 திருச்சாழல்-15.)

4. பொ-ரை: குண்டலம் விளங்குகின்ற காதினையுடையவனும்,

4குண்டலம் திகழ் காது உடையானை, கூற்று உதைத்த கொடுந்தொழிலானை,
வண்டு அலம்பும் மலர்க் கொன்றையினானை, வாள் அரா மதி சேர் சடையானை,
கெண்டை அம் தடங்கண் உமை நங்கை கெழுமி ஏத்தி வழிபடப் பெற்ற
கண்டம் நஞ்சு உடைக் கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
  கு-ரை: "ஒன்று" என்றது தொகைக் குறிப்பு. "பற்றவன்" என்றதில் அகரம், ஒட்டுச் சொல்லாய ஒரு மொழியிடை வந்த சாரியை. 'பரவிக்கொண்டானை' என்பதும் பாடம்.

3. பொ-ரை: வானத்தில் திரிகின்ற முப்புரங்கள் தீப்பிழம்பாய் எரிந்தொழியுமாறு செய்து, அக்காலை, சிவந்த கண்களையுடைய திருமாலாகிய விடையின்மேல் விளங்கியவனும், யானையின் உரித்த தோலை விரும்பிப் போர்த்தவனும், மன்மதனைத் தீயாய் எரியும்படி நெற்றிக்கண்ணைத் திறந்தவனும், வரிகளைக் கொண்ட வெள்ளிய வளைகளை அணிந்தவளாகிய, 'உமை' என்னும் நங்கை அணுகி நின்று, துதித்து வழிபடப் பெற்ற பெரியோனும் ஆகிய, திருவேகம்பத்தில் உள்ள பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு.

கு-ரை: திரிபுரம் எரித்த ஞான்று சிவபிரானைத் திருமால் இடபமாய்ச் சுமந்தமையை,


"தடமதில்க ளவைமூன்றுந் தழலெரித்த அந்நாளில்
இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ"

என்ற திருவாசகத்தால் உணர்க. (தி. 8 திருச்சாழல்-15.)

4. பொ-ரை: குண்டலம் விளங்குகின்ற காதினையுடையவனும்,

5வெல்லும் வெண்மழு ஒன்று உடையானை, வேலை நஞ்சு உண்ட வித்தகன் தன்னை,
அல்லல் தீர்த்து அருள்செய்ய வல்லானை, அருமறை அவை அங்கம் வல்லானை,
எல்லை இல் புகழாள் உமை நங்கை என்று ஏத்தி வழிபடப் பெற்ற
நல்ல கம்பனை, எங்கள் பிரானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
  

கூற்றுவனை உதைத்துக் கொன்ற கொடுமையான தொழிலை உடையவனும், வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மலர் மாலையை அணிந்தவனும், கொலைத் தொழிலையுடைய பாம்பு பிறையைச் சேர்ந்து வாழும் சடையை உடையவனும் ஆகிய, கெண்டைமீன் போலும் பெரிய கண்களையுடைய, 'உமை' என்னும் நங்கை அணுகி நின்று, துதித்து வழிபடப் பெற்ற, கண்டத்தில் நஞ்சினையுடைய, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு.

கு-ரை: "கண்டம்" என்றதில் தொக்கு நின்ற ஏழனுருபு. "உடை" என்ற, ஈறுகெட்ட பெயரெச்சக் குறிப்பைக் கொண்டது.

5. பொ-ரை: யாவரையும் வெல்லும் தன்மையுடைய, வெள்ளிய மழு ஒன்றை உடையவனும், கடலில் தோன்றிய நஞ்சினை உண்ட சதுரப்பாடுடையவனும், அடியார்களுக்குத் துன்பங்களைப் போக்கி அருள்செய்ய வல்லவனும், அரிய வேதங்களையும் அவற்றின் அங்கங்களையும் செய்ய வல்லவனும் ஆகிய, அளவற்ற புகழை யுடையவளாகிய, 'உமை' என்னும் நங்கை, எந்நாளும், துதித்து வழிபடப்பெற்ற, நன்மையையுடைய, திருவேகம்பத்தில் உள்ள எங்கள் பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு!

6திங்கள் தங்கிய சடை உடையானை, தேவதேவனை, செழுங் கடல் வளரும்
சங்க வெண்குழைக் காது உடையானை, சாம வேதம் பெரிது உகப்பானை,
மங்கை நங்கை மலை மகள் கண்டு மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
கங்கையாளனை, கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
  

கு-ரை: வெண்மை, கூர்மையைக் குறிக்கும் குறிப்புமொழி, நன்மையுடைமை பற்றியே, இறைவன், 'சிவன்' எனப்படுதல் அறிந்து கொள்க.

6. பொ-ரை: பிறை தங்கியுள்ள சடையையுடையவனும், தேவர்க்குத் தேவனும், வளவிய கடலில் வளர்கின்ற சங்கினால் இயன்ற, 'வெள்ளிய குழையை யணிந்த காதினையுடையவனும், சாம வேதத்தை மிக விரும்புபவனும் ஆகிய, என்றும் மங்கைப் பருவம் உடைய நங்கையாகிய மலைமகள் தவத்தாற் கண்டு அணுகி, துதித்து வழிபடப்பெற்ற, கங்கையை யணிந்த, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு.

கு-ரை: திருவேகம்பத்தில், இறைவி, இறைவனது இலிங்கத் திருவுருவைத் தவம் செய்து கண்ட வரலாற்றினை, திருக்குறிப்புத் தொண்டர் புராணத்துட்காண்க. இனி, கம்பையாற்றின் மணலால் இறைவி இலிங்கம் அமைத்து வழிபட்டனர் என்றும் புராணம் கூறும். அதன் வழி நின்று, "கண்டு" என்றதற்கு, 'ஆக்கி' என்று உரைப்பினும் ஆம்.

7. பொ-ரை: தேவர்கள் தொழுது துதிக்க இருப்பவனும்,

7விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை, வேதம் தான் விரித்து ஓத வல்லானை,
நண்ணினார்க்கு என்றும் நல்லவன் தன்னை, நாளும் நாம் உகக்கின்ற பிரானை,
எண் இல் தொல் புகழாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணு மூன்று உடைக் கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
  

கு-ரை: வெண்மை, கூர்மையைக் குறிக்கும் குறிப்புமொழி, நன்மையுடைமை பற்றியே, இறைவன், 'சிவன்' எனப்படுதல் அறிந்து கொள்க.

6. பொ-ரை: பிறை தங்கியுள்ள சடையையுடையவனும், தேவர்க்குத் தேவனும், வளவிய கடலில் வளர்கின்ற சங்கினால் இயன்ற, 'வெள்ளிய குழையை யணிந்த காதினையுடையவனும், சாம வேதத்தை மிக விரும்புபவனும் ஆகிய, என்றும் மங்கைப் பருவம் உடைய நங்கையாகிய மலைமகள் தவத்தாற் கண்டு அணுகி, துதித்து வழிபடப்பெற்ற, கங்கையை யணிந்த, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு.

கு-ரை: திருவேகம்பத்தில், இறைவி, இறைவனது இலிங்கத் திருவுருவைத் தவம் செய்து கண்ட வரலாற்றினை, திருக்குறிப்புத் தொண்டர் புராணத்துட்காண்க. இனி, கம்பையாற்றின் மணலால் இறைவி இலிங்கம் அமைத்து வழிபட்டனர் என்றும் புராணம் கூறும். அதன் வழி நின்று, "கண்டு" என்றதற்கு, 'ஆக்கி' என்று உரைப்பினும் ஆம்.

7. பொ-ரை: தேவர்கள் தொழுது துதிக்க இருப்பவனும்,

8சிந்தித்து என்றும் நினைந்து எழுவார்கள் சிந்தையில்-திகழும் சிவன் தன்னை,
பந்தித்த(வ்) வினைப்பற்று அறுப்பானை, பாலொடு ஆன் அஞ்சும் ஆட்டு உகந்தானை,
அந்தம் இல் புகழாள் உமை நங்கை ஆதரித்து வழிபடப் பெற்ற
கந்த வார்சடைக் கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
  

வேதங்களை விரித்துச் செய்ய வல்லவனும், தன்னை அடைந்தவர்கட்கு எந்நாளும் நலத்தையே செய்பவனும், நாள்தோறும் நாம் விரும்புகின்ற தலைவனும் ஆகிய, எண்ணில்லாத பழையவான புகழை யுடையவளாகிய, 'உமை' என்னும் நங்கை, எந்நாளும் துதித்து வழிபடப்பெற்ற, கண்களும் மூன்று உடைய, திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு.

கு-ரை: செய்யும் செயல்கள்தாம் எண்ணில்லாதனவாகலின், அவற்றால் வரும் புகழ்களும் எண்ணிலவாயின.

அவைதாம் அனாதியாக வருதலின் தொல்புகழாயின. "கண்ணும்" என்ற உம்மை சிறப்பு. 'கண்ணு' என உகரச்சாரியையாகக் கண்ணழிப் பினுமாம்.

8. பொ-ரை: நாள்தோறும் தன்னையே சிந்தித்து, துயிலெழுங் காலத்துத் தன்னையே நினைத்து எழுவார்களது உள்ளத்தில் விளங்குகின்ற மங்கலப் பொருளானவனும், உயிர்களைப் பிணித்துள்ள வினைத் தொடக்கை அறுப்பவனும், பால் முதலிய ஆனஞ்சும் ஆடுதலை விரும்பியவனும் ஆகிய, முடிவில்லாத புகழையுடையவளாகிய, 'உமை' என்னும் நங்கை விரும்பி வழிபடப்பெற்ற, கொன்றை முதலிய பூக்களின் மணத்தையுடைய, நீண்ட சடையையுடைய, திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக்காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு!

கு-ரை: சிந்தித்தல், இறைவனது பெருமைகள் பலவற்றை என்க. 'வினை பற்றறுப்பானை' என்பதும் பாடம்.

9வரங்கள் பெற்று உழல் வாள் அரக்கர் தம் வாலிய(ப்) புரம் மூன்று எரித்தானை,
நிரம்பிய தக்கன் தன் பெருவேள்வி நிலந்தரம் செய்த நிட்கண்டனை,
பரந்த தொல் புகழாள் உமை நங்கை பரவி ஏத்தி வழிபடப்பெற்ற
கரங்கள் எட்டு உடைக் கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
  

9. பொ-ரை: தவத்தின் பயனாகிய வரங்களைப் பெற்றமையால், வானத்தில் உலாவும் ஆற்றலைப் பெற்ற கொடிய அசுரர்களது வலிய அரண்கள் மூன்றினை எரித்தவனும், தேவர் எல்லாரும் நிரம்பிய தக்கனது பெருவேள்வியை அழித்த வன்கண்மையுடையவனும் ஆகிய, பரவிய, பழைய புகழையுடையவளாகிய, 'உமை' என்னும் நங்கை முன்னிலையாகவும், படர்க்கையாகவும் துதித்து வழிபடப் பெற்ற, எட்டுக் கைகளையுடைய, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு!

கு-ரை: அசுரர்கள் வரம் பெற்றதனை அவர்களது ஊர்மேல் ஏற்றி அருளினார். "நிரந்தரம்" என்றது, 'மாறாத அழிவு' என்றதாம். "நிர்க்கண்டகம்" மாறாதவன்கண்மை. 'நிர்' என்னும் வடமொழி இடைச்சொல், இன்மையையேயன்றி தேற்றப் பொருளும் தருவதாதல் அறிக.

10. பொ-ரை: தேவர் பெருமானாகிய சிவபெருமானை, அவனது ஒரு கூறாகிய உமாதேவிதானே, தான் வழிபடவேண்டுவது இல்லை

10எள்கல் இன்றி இமையவர் கோனை, ஈசனை, வழிபாடு செய்வாள் போல்
உள்ளத்து உள்கி, உகந்து, உமை நங்கை வழிபடச் சென்று நின்றவா கண்டு,
வெள்ளம் காட்டி வெருட்டிட, அஞ்சி வெருவி ஓடித் தழுவ வெளிப்பட்ட
கள்ளக் கம்பனை, எங்கள் பிரானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
  

9. பொ-ரை: தவத்தின் பயனாகிய வரங்களைப் பெற்றமையால், வானத்தில் உலாவும் ஆற்றலைப் பெற்ற கொடிய அசுரர்களது வலிய அரண்கள் மூன்றினை எரித்தவனும், தேவர் எல்லாரும் நிரம்பிய தக்கனது பெருவேள்வியை அழித்த வன்கண்மையுடையவனும் ஆகிய, பரவிய, பழைய புகழையுடையவளாகிய, 'உமை' என்னும் நங்கை முன்னிலையாகவும், படர்க்கையாகவும் துதித்து வழிபடப் பெற்ற, எட்டுக் கைகளையுடைய, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு!

கு-ரை: அசுரர்கள் வரம் பெற்றதனை அவர்களது ஊர்மேல் ஏற்றி அருளினார். "நிரந்தரம்" என்றது, 'மாறாத அழிவு' என்றதாம். "நிர்க்கண்டகம்" மாறாதவன்கண்மை. 'நிர்' என்னும் வடமொழி இடைச்சொல், இன்மையையேயன்றி தேற்றப் பொருளும் தருவதாதல் அறிக.

10. பொ-ரை: தேவர் பெருமானாகிய சிவபெருமானை, அவனது ஒரு கூறாகிய உமாதேவிதானே, தான் வழிபடவேண்டுவது இல்லை

11பெற்றம் ஏறு உகந்து ஏற வல்லானை, “பெரிய எம்பெருமான்” என்று எப்போதும்
கற்றவர் பரவப்படுவானை, “காணக் கண் அடியேன் பெற்றது” என்று
கொற்றவன், கம்பன், கூத்தன் எம்மானை, குளிர் பொழில்-திரு நாவல் ஆரூரன்
நல்-தமிழ் இவை ஈர்-ஐந்தும் வல்லார், நன்நெறி(ய்) உலகு எய்துவர் தாமே .
  பயனின்மை யறிக. இத் திருப்பதிகத்துள், "நல்ல கம்பன்", "கள்ளக் கம்பன்" என வந்தவையும், அம்மை வழிபட்ட நிலையைக்கருதி அருளினவே யாதலின், அவற்றை உருத்திரர் வழிபட்ட நிலை, திருமால் வழிபட்ட நிலைகளாகக் கூறும் புராண வரலாற்றோடு இயைக்க முயலுதல் பொருந்தாமை யறிக.

11. பொ-ரை: குளிர்ந்த சோலைகளையுடைய திருநாவலூரனாகிய நம்பியாரூரன், ஆனேற்றை விரும்பி ஏற வல்லவனும், மெய்ந்நூல்களைக் கற்றவர்கள், 'இவன் எம் பெரிய பெருமான்' என்று எப்போதும் மறவாது துதிக்கப்படுபவனும், யாவர்க்கும் தலைவனும், கூத்தாடுதலை உடையவனும் ஆகிய, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு அடியேன், கண்பெற்றவாறு வியப்பு என்று சொல்லிப் பாடிய நல்ல தமிழ்ப் பாடலாகிய இவை பத்தினையும் பாட வல்லவர். நன்னெறியாற்பெறும் உலகத்தைத் திண்ணமாக அடைவர்.

கு-ரை: 'பெற்ற' எனக் கெடுதற்பாலதாகிய மகரம், செய்யுளின்பம் நோக்கிக் கெடாதுநின்றதென்க. இனி, 'பெற்றவேறு' என்பதே பாடம் எனினுமாம். இவ்வாறன்றி, 'பெற்றத்தை ஏறுதலை உகந்து ஏற வல்லானை' என்றுரைத்தல் சிறவாமையறிக. "பெரிய பெருமான்" என்றதனை, "பெரிய பெருமானடிகள்" (தி. 7 ப. 53.) என்றது போலக் கொள்க. நன்னெறி, ஞானநெறி; அதனாற் பெறும் உலகம், சிவலோகம்.                                                                                                                                                 திருச்சிற்றம்பலம்.


Thursday, April 23, 2020

அலகு.1 Maha Vishnu (திருமால்)

பரிபாடல் (3)

(Paripadal)

MAHALAXMI ART & CRAFT laxmi vishnu Paper Wall Poster Without Frame ...

 

திருமால்

எல்லாப் பொருளுமாய், ஆற்றலுமாய், காலமுமாய், இடமுமாய் விளங்கி வழங்கிக்கொண்டிருப்பவன் திருமால் என்று இந்தப் பாடல் உணர்த்துகின்றது. புராணக்கதைச் செய்திகள் இதில் புகுத்தப்பட்டுள்ளன.
ஒன்பது என்னும் சொல்லையும், ஒன்பதைக் குறிக்கும் தொண்டு என்னும் சொல்லையும் தொல்காப்பியம் பயின்று காட்டுவது போல இது பயின்று காட்டுகிறது.
அரை என்னும் ஒன்றில் பாதியை இது பாகு எனக் குறிப்பிடுகிறது.
தமிழ்மொழி வரலாற்றில் இவை குறிப்பிடத் தக்கவை


அ
மாயமானவனே!
மாயம் செய்பவனே!
திருவடி நிழலைத் தந்து மறுபிறப்பு இல்லாமல் செய்பவனே!
மணி போன்ற நீலநிறம் கொண்டவனே!
ஆ
(புராணக் கதைச் செய்திகள் – விளக்கம் உ. வே. சா. குறிப்பு)
தீ, காற்று, ஆகாயம், நிலம், நீர் – ஐந்தும்,
சூரியன், நிலா, அறநெறி. (மூன்றும்) (5+3=8 அட்டமூர்த்திகள் – ஈசன் வடிவம்)
ஐவர் (வியக்கும் தன்மை பெற்ற ஐவர்)
திதி என்னும் தாய் பெற்ற சிறுவர் (அரக்கர்)
விதியின் மக்கள் (12) (ஆதிப்பிரமன் நினைவில் தோன்றிய பிரமர் 10 பிரமர். அவர்களில் ஒருவர் காசிபர். காசிபன் மக்கள் 12 ஆதித்தர்)
எண்மர் (வசுக்கள் 8 பேர்) (8)
கபிலர் 11 பேர் (11) (செந்நெறியைத் தீர்மானிக்களும் உருத்திரர் 11 பேர்)
தாமா என்னும் உருப்பசிக் குதிரை பெற்ற இருவர் (2) (உருப்பசி குதிரை வடிவில் தோன்றிளாள். அவள் அழகில் மயங்கிய ஆதித்தன் தானும் ஆண்குதிரை வடிவெடுத்து அவளைப் புணர்ந்தான், அப்போது விழுந்த இரண்டு விந்துத் துளிகளால் பிறந்தவர் இருவர்)
(33 தேவர் 12 + 8 + 11 + 2 = 33)
தருமன் (எமன்)
மடங்கல் (எமனுக்குக் குற்றேவல் =செய்பவர்)
மூவேழ் 21 உலகம்,
மன்பது = எஞ்சி நிற்பவை
இவை அனைத்தும் உன்னுள் பரந்து கிடக்கின்றன.
இ
வாய்மொழி நூல் தந்தவன்
வாய்மொழி என்னும் ஓடையில் மலர்ந்தது தாமரை
தாமரையில் பிறந்தவன் பிரமன்
பிரமனின் தந்தை நீ என்று அந்தணர் வேதம் சொல்கிறது
ஈ
அமரர் கையில் பூண் அணிந்தவர். அமிழ்தத்தைப் பிடுங்கிக் கொண்டவர்கள்.
உன் தாய் வினையை
அமரர் அசுரர் ஆகிய இருவர் கடைந்தெடுத்த அமிழ்தத்தை ஒருவரை ஏமாற்றி ஒருவருக்கு அளித்த மாயன் நீ
இப்படித் தாயின் துன்பத்தைப் போக்கியது ஒரு புள்
அந்த ஆண்கருடப் பறவையைக் கொடியாக்கி உயர்த்திக்கொண்டவன் நீ
உன் திருவடியைத் தொழாதவர்களும் இருக்கிறார்களா? இல்லை.
உ
கீழ் ஏழ் உலகில் அடியைப் பதித்தவன்
தீ, எமன்-தூதர், எமன், 1000 கதிர் பரப்பும் சூரியன், நீ
ஊழிக் காலத்தைக் கையிலுள்ள சக்கரமாக்கிச் சுழற்றுபவன்.
பன்றி உருக்கொண்டு பெருநிலத்தை உழுதவன்  
என்றும்
ஊ
பிரமனைத் தோற்றுவித்த நீ பிரமனாக அன்னச்சேவல் உருவில் வானமெல்லாம் பறந்து வானத்தில் ஒழுகும் நீரை உண்டவன்
என்றும்
எ
வான-ஞாலத்தில் வாழும் தேவரும், அவர்களில் எட்டு தெய்வப் புலவர்களும் உன்னைப் பாடினர். அவர்கள் உன்னைப் பாடிய வகையைப் பின்பற்றி நான் பாடிய பாட்டு இது.
ஏ
கூந்தல் என்னும் குதிரை வடிவில் வந்தவனைக் கொன்று கூந்தல் என்னும் பெயரைப் பெற்றவன் நீ
Maha Vishnu Abode Painting by Vijayann Rajasabai
ஐ
இரு சாரார் கடைந்த அமிர்தத்தை ஒரு சாரார்க்கு வழங்கி நடுவுநிலைமை திரம்பிய ஒரு கையை உடையவன்.
ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, நூறு, ஆயிரம், பதினாயிரம், நூறாயிரம் – என்று கைகள் கொண்டவன்.
ஆம்பல் Infinitive என்னும் எண்ணிக்கை இல்லாத உடம்பினைப் பெற்றவன் நீ
ஒ
உனக்கு ஒப்பானவர் உன்னைத் தவிர வேறு யாராவது இருப்பதை நீ அறிவாயா?
பண்டைய மரபில் தோன்றிய முதுமொழிக்கெல்லாம் முதல்வன் நீ
உன்னைப் பற்றிக் கேட்டேன்.
என் வலிமை, மனம், உணர்வு, - அனைத்துக்கும் தெரியவில்லை.
ஓ
நிழல், ஒளி, கதிர்,
பிறை, நிறைமதி
உண்டி, உடையணி
என்று எல்லாமாக தேவர்களுக்கே முதல்வனாக விளங்குபவன் நீ
ஔ
நீ நிலத்தைப் பன்றி உருவெடுத்து உழுதபோது பயந்தோடிக் கடலில் ஒளிந்துகொண்ட அவுணர்களை யெல்லாம் அழித்து முதல்வன் ஆகித் திகழ்பவன் நீ
க
உனக்குப் பகைவர் என்றோ, நண்பர் என்றோ பாகுபாடு இல்லை
கா
ஆயிரம் அவுணர்களின் தலையாகிய பாம்புகளை உண்ட கருடப்புள்-கொடி கொண்டவன் நீ.  
கி
ஓ – என்னும் பழங்காலத்துக்கு முதல்வன் நீ
ஏஎ – என்று சொல்லி உன்னை அறிகின்றோம்
நீக்குள் சூடு
பூக்குள் மணம்
கல்லுக்குள் மணி
சொல்லிக்குள் வாய்மை
அறத்துக்குள் அன்பு
மறத்துக்குள் வலிமை
வேதத்துக்குள் மறைபொருள்
பூதத்துக்குள் முதல்
சூரியன் ஒளி
நிலாவின் அளி (கொடை)
அனைத்தும் நீ
அவற்றுக்குள் இருப்பவனும் நீ
மறதியும் நீ
அதலால் மாயமாய் இருக்கிறாய்.
கீ
தொழிலில் முதல், இடை, கடை எல்லாம் நீ
பிறவாதவனும் நீ
பிறந்தவனும் நீ
உன்னைப் பெற்றெடுத்தவர் யாருமில்லை  
காயாம் பூ
கு
பூவை என்னும் காயாம்பூ நிறம் கொண்டவன்
அருள் உன் குடை
அறம் உன் செங்கோல்
மூவேழ் (21) நிலத்தையும் பாதுகாப்பவன்
கூ
பாழ் (0), கால் (1/4), பாகு (1/2), ஒன்று (1), இரண்டு (2), மூன்று (3), நான்கு (4), ஐந்து (5), ஆறு (6), ஏழு (7), எட்டு (8),  தொண்டு (9), - என்று நான்கு வகையான ஊழி எண்களைச் சொல்லித்தருபவன் நீ
பாழ் என்னும் 0 ஒருவகை
பின்னம் ஒருவகை
அளவு காட்டும் எண் ஒருவகை
அளவு காட்டாத தாமரை, ஆம்பல், வெள்ளம் போன்ற எண்கள் ஒருவகை
ஆக நான்கு வகை
கெ
கருமை, வெண்மை, பொன்மை, பசுமை, - நிறம் நீ
விலக்கும் இடக்கை, வளைக்கும் குடங்கை, கோக்கும் கோவலம், காக்கும் காவலம், - நீ
காணாதவை, நினைவில் வருபவை - நீ
மாய மன்னன், உலகாள் மன்னன் – நீ
புலவன், பாணன் – நீ
மாலை அணிந்தவன் – நீ
தோல்வி காணாதவன் – நீ
பொன்னிறப் பட்டாடை, வலம்புரிச் சங்கம் – கொண்டவன் நீ
திருமகளின் கணவன் -நீ
வெற்றி வீரன் - நீ
கே
உலகம் தோன்றாத காலத்தில் நிலவிய வெள்ளத்தில் பூத்த தாமரைப் பொகுட்டில் உன் நேமிச்சக்கர நிழல் படியும்படி வாய்மொழி மகனாக நின்பவன் நீ.
அந்த நிழல் எனக்கு வேண்டும்.

3. திருமால்

அ
மாஅயோயே! மாஅயோயே!
மறு பிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி
மணி திகழ் உருபின் மாஅயோயே!
ஆ
தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும்,
ஞாயிறும், திங்களும், அறனும், ஐவரும்,      5
திதியின் சிறாரும், விதியின் மக்களும்,
மாசு இல் எண்மரும், பதினொரு கபிலரும்,
தா மா இருவரும், தருமனும், மடங்கலும்,
மூ ஏழ் உலகமும், உலகினுள் மன்பதும்,
மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம்    10
இ
மாயா வாய்மொழி உரைதர வலந்து:
'வாய்மொழி ஓடை மலர்ந்த
தாமரைப் பூவினுள் பிறந்தோனும், தாதையும்,
நீ' என மொழியுமால், அந்தணர் அரு மறை.
ஈ
'ஏஎர், வயங்கு பூண் அமரரை வௌவிய அமிழ்தின்,             15
பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளினை;
பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளின்
நிவந்து ஓங்கு உயர் கொடிச் சேவலோய்! நின்
சேவடி தொழாரும் உளரோ? அவற்றுள்
உ
கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை;   20
தீ செங் கனலியும், கூற்றமும், ஞமனும்,
மாசு இல் ஆயிரம் கதிர் ஞாயிறும், தொகூஉம்
ஊழி ஆழிக்கண், இரு நிலம், உரு கெழு
கேழலாய் மருப்பின் உழுதோய்' எனவும்,
ஊ
'மா விசும்பு ஒழுகு புனல் வறள அன்னச்   25
சேவலாய் சிறகர்ப் புலர்த்தியோய்' எனவும்,
எ
ஞாலத்து உறையுள் தேவரும் வானத்து
நால் எண் தேவரும் நயந்து நிற் பாடுவோர்
பாடும் வகையே: எம் பாடல்தாம் அப்
பாடுவார் பாடும் வகை.    30
ஏ
கூந்தல் என்னும் பெயரொடு கூந்தல்
எரி சினம் கொன்றோய்! நின் புகழ் உருவின, கை;
ஐ
நகை அச்சாக நல் அமிர்து கலந்த
நடுவுநிலை திறம்பிய நயம் இல் ஒரு கை.
இரு கை மாஅல்!                    35
முக் கை முனிவ! நாற் கை அண்ணல்!
ஐங் கைம் மைந்த! அறு கை நெடு வேள்!
எழு கையாள! எண் கை ஏந்தல்!
ஒன்பதிற்றுத் தடக் கை மன் பேராள!
பதிற்றுக் கை மதவலி! நூற்றுக் கை ஆற்றல்!           40
ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள!
பதினாயிரம் கை முதுமொழி முதல்வ!
நூறாயிரம் கை ஆறு அறி கடவுள்!
அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல்
இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை!   45
ஒ
நின்னைப் புரை நினைப்பின் நீ அலது உணர்தியோ,
முன்னை மரபின் முதுமொழி முதல்வ?
நினக்கு விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும்,
வலியினும், மனத்தினும், உணர்வினும், எல்லாம்
வனப்பு வரம்பு அறியா மரபினோயே! 50
ஓ
அணி நிழல் வயங்கு ஒளி, ஈர் எண் தீம் கதிர்,
பிறை வளர், நிறை மதி உண்டி,
அணி மணிப் பைம் பூண், அமரர்க்கு முதல்வன் நீ;
ஔ
திணி நிலம் கடந்தக்கால், திரிந்து அயர்ந்து, அகன்று ஓடி,
நின் அஞ்சிக் கடற் பாய்ந்த பிணி நெகிழ்பு அவிழ் தண் தார்    55
அன்னவர் பட, அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ;
க
அதனால், 'பகைவர் இவர்; இவர் நட்டோர்' என்னும்
வகையும் உண்டோ, நின் மரபு அறிவோர்க்கே?
கா
ஆயிர அணர் தலை அரவு வாய்க் கொண்ட
சேவல் ஊர்தியும், 'செங் கண் மாஅல்!                60
கி
ஓ! 'எனக் கிளக்கும் கால முதல்வனை;
ஏஎ இன கிளத்தலின் இனைமை நற்கு அறிந்தனம்:
தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;
கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;
அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;             65
வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;
வெஞ் சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;
அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ; ஆதலின்,
உறைவும் உறைவதும் இலையே; உண்மையும்
மறவியில் சிறப்பின் மாயமார் அனையை;  70
கீ
முதல்முறை, இடைமுறை, கடைமுறை, தொழிலில்
பிறவாப் பிறப்பு இலை; பிறப்பித்தோர் இலையே:
கு
பறவாப் பூவைப் பூவினோயே!
அருள் குடையாக, அறம் கோலாக,
இரு நிழல் படாமை மூ ஏழ் உலகமும்     75
ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ;
கூ
பாழ் என, கால் என, பாகு என, ஒன்று என,
இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என,
ஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என,
நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை:              80
கெ
செங் கட் காரி! கருங் கண் வெள்ளை!
பொன் கட் பச்சை! பைங் கண் மாஅல்!
இட வல! குட வல! கோவல! காவல!
காணா மரப! நீயா நினைவ!
மாயா மன்ன! உலகு ஆள் மன்னவ!     85
தொல் இயல் புலவ! நல் யாழ்ப் பாண!
மாலைச் செல்வ! தோலாக் கோட்ட!
பொலம் புரி ஆடை! வலம்புரி வண்ண!
பருதி வலவ! பொரு திறல் மல்ல!
திருவின் கணவ! பெரு விறல் மள்ள!                 90
கே
மா நிலம் இயலா முதல்முறை அமையத்து,
நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய
வாய்மொழி மகனொடு மலர்ந்த
தாமரைப் பொகுட்டு நின் நேமி நிழலே!

திருமால்
கடவுள் வாழ்த்து
பாட்டு - கடுவன் இளவெயினனார்
இசை - பெட்டனாகனார்
பண் – பாலையாழ்

மாணிக்கவாசகர் Thiruvembavai Padalgal 01-20 (திருவெம்பாவை பாடல்கள் 01-20)

திருவெம்பாவை பாடல் 20 போற்றியென் வாழ்முதலாகிய பொருளே புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு ஏற்றி நின் திருமுகத்து எமக்கருள் மலரும் எழில்ந...